உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஜல் போட்டோவுக்கு 8.5 லட்சம் லைக்ஸ்

காஜல் போட்டோவுக்கு 8.5 லட்சம் லைக்ஸ்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, ரவுடி பேபி, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அண்மையில், நீல நிற மாடர்ன் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு அந்த போட்டோக்களுக்கு 8.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !