மேலும் செய்திகள்
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1499 days ago
பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல்
1499 days ago
ராஜமவுலி இயக்கத்தில் கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் பிரமோஷன் பாடலாக 'நட்பு' என்ற பெயரில் தமிழிலும், 'தோஸ்தி' என்ற பெயரில் தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும், 'பிரியம்' என்ற பெயரில் மலையாளத்திலும் நேற்று காலை 11 மணிக்கு வெளியிட்டனர்.
24 மணி நேரத்திற்குள்ளாக இப்பாடல் 2 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக ஹிந்தியில் 78 லட்சம், தெலுங்கில் 62 லட்சம், தமிழில் 27 லட்சம், கன்னடத்தில் 10 லட்சம், மலையாளத்தில் 9 லட்சம் பார்வைகளை யு டியூபில் பெற்றுள்ளது.
'பாகுபலி' படங்கள் மூலம் ஹிந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார் ராஜமவுலி. அதனால்தான், இந்த பிரமோஷன் பாடல் கூட மற்ற மொழிகளைக் காட்டிலும் ஹிந்தியில் அதிகபட்ச பார்வைகளைப் பெற்றுள்ளது.
தற்போது யு டியுப் டிரெண்டிங்கில் 'நட்பு' பாடல் இரண்டாம் இடத்திலும், 'தோஸ்தி' தெலுங்குப் பாடல் நான்காம் இடத்திலும், ஹிந்திப் பாடல் பதினாறாம் இடத்திலும் உள்ளன.
1499 days ago
1499 days ago