மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1499 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1499 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1499 days ago
'வலிமை அப்டேட்' என்ற வார்த்தையைக் கேட்டு படக்குழுவினருக்கே போரடித்துப் போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 'வலிமை' படத்தின் முதல் பார்வையைக் கடந்த மாதம் வெளியிட்டனர். அதற்கடுத்து இன்று இரவு 9 மணிக்கு 'வலிமை' படத்தின் முதல் பாடல் வெளியாவப் போவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் வலிமை முதல் பாடல் பற்றிய அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சோனி சவுத் மியூசிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட முதல் பார்வைக்கு எந்த முன்னறிவிப்பும் சொல்லாமல் வெளியிட்டது போல இதையும் வெளியிடப் போவது போலத் தெரிகிறது. பத்திரிகைச் செய்தியாக வெளியிடாமல் சமூக வலைத்தளங்களில் உள்ள சிலருக்கு மட்டும் இது பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
யுவன்ஷங்கர் ராஜா, அஜித் கூட்டணி எப்போதுமே வெற்றிகரமான கூட்டணியாக இருந்து வருகிறது. அது போலவே இன்றைய 'வலிமை' முதல் சிங்கிள் பாடலும் இருக்கும் என இருவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
1499 days ago
1499 days ago
1499 days ago