ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு
ADDED : 8 hours ago
நடிகர் அஜித் நடிப்பில் இந்தாண்டு ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என இரு படங்கள் வெளியாகின. இவற்றில் குட் பேட் அக்லி வெற்றி பெற்றது. அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். ஆனால் தொடர்ச்சியாக பல கார் ரேஸ் பந்தையங்களில் அஜித் பங்கேற்று வருவதால் இதன் படப்பிடிப்பு தாமதமாகிறது. அதுமட்டுமல்ல அஜித்தின் சம்பளம், பட பட்ஜெட் பிரச்னையால் படப்பிடிப்பிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் கார் ரேஸை முடித்து திரும்பி உள்ள அஜித், கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகள் அனோஷ்காவும் வந்திருந்தார். அஜித் கோவிலுக்கு வருவதை அறிந்து அந்த பகுதியில் ஏராளமான ரசிகர்கள் கூடினர்.