உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்

கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்

விக்ரம் பிரபு நடிப்பில் கிறிஸ்துமஸ் தினத்தில் திரைக்கு வந்த படம் சிறை. சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இந்த படம், ஐந்து நாளில் 8 கோடி வரை வசூலித்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர், இந்த படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், ‛‛சிறை ஒரு நல்ல படம். பல இடங்களில் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. படம் முடிந்த பிறகும் அனைத்து கதாபாத்திரங்களும் என் மனதில் நின்றன. விக்ரம் பிரபு படம் முழுக்க உறுதியான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு, அக்ஷய் குமார், அனிஷாவின் நடிப்பு அந்த கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும் உணர்ச்சிகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளன. இப்படி ஒரு சிறந்த படைப்பை தயாரித்த லலித்குமாருக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் நம் இதயங்களை சிறை பிடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மட்டுமின்றி தேவையானதும் கூட. இந்த சிறை படத்தின் மூலமாக தமிழ் சினிமா இந்த ஆண்டை மிகச்சிறந்த வெற்றியுடன் நிறைவு செய்வதாக கருதுகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !