உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம்

வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம்

திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு போதை ஆசாமிகள் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கண்டன பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், மின்சார ரயிலில் புலம் பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்தியுள்ள அரக்கத்தனமான அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித இலக்கு புரியாமலும் இந்த மாதிரி தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த, கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீது சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிசை தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !