மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1521 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1521 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1521 days ago
சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஆர்யாவின் கேரக்டருக்கு இணையராக டான்சிங் ரோஸ், வேம்புலி கேரக்டர்களும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இதில் டான்சிங் ரோசாக நடித்திருப்பவர் ஷமீர் கல்லரக்கல்.
ஷபீர் , 2014ம் ஆண்டு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பேட்ட, டெடி அடங்கமறு படங்களில் நடித்தார். என்றாலும் சார்பட்டா படத்தின் டான்சிங் ரோஸ் கேரக்டர் தான் அவரை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது : ஆர்யாவின் கபிலன் பாத்திரம் முகம்மது அலியை மையப்படுத்தியது, மைக் டைசனுக்கான அர்ப்பணிப்பாக உருவானது தான் வேம்புலி பாத்திரம். என்னுடைய டான்ஸிங்க் ரோஸ் பாத்திரம் இங்கிலாந்தை சேர்ந்த புகழ்மிகு பாக்ஸர் நசீம் ஹமீத் அவர்களை மையப்படுத்தி உருவானது. நசீம் ஹமீத், நடனத்தைப் போலவே இருக்கும், தன் கால் அசைவுகளுக்காகவே பெரும் புகழைப் பெற்றவர். நான் அவரது குத்துச்சண்டை வீடியோக்களை தொடர்ந்து பார்த்து, அவரது உடல்மொழியை எனக்குள் கொண்டு வந்தேன்.
கடைசி நிமிடத்தில் இப்படத்தில் பங்கேற்றதால், 2 மாத நடிப்பு மற்றும் குத்துச்சண்டை பயிற்சிகளை தவறவிட்டு, நேராக படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டேன். இயக்குநர் பா.ரஞ்சித், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இருவரும், முழு சுதந்திரத்தை அளித்தனர். டான்சிங் ரோஸுக்கு உயிர் கொடுக்க அது எனக்கு பேருதவியாக இருந்தது. என்றார்.
1521 days ago
1521 days ago
1521 days ago