உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகியும், ராஜீவ் மேனனின் தாயாருமான கல்யாணி மேனன் மறைவு

பாடகியும், ராஜீவ் மேனனின் தாயாருமான கல்யாணி மேனன் மறைவு

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தாயாரும், பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன்(80) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஆக., 2) காலமானார். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து புதிய மன்னர்கள்(பாடல் : வாடி சாத்துக்குடி), காதலன்(பாடல் : இந்திரையோ இவள் சுந்தரியோ), முத்து(பாடல் : குலுவாலிலே) அலைபாயுதே(பாடல் : அலைபாயுதே) உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு நாளை(ஆக., 3) மதியம் 2மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடக்கிறது. கல்யாணி மேனின் இரு மகன்களில் ஒருவரான ராஜீவ் மேனன், இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், தமிழில் பிரபல இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !