உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப்சீரிஸிற்காக இணைந்த கவின் - ரெபா ஜான்

வெப்சீரிஸிற்காக இணைந்த கவின் - ரெபா ஜான்

சின்னத்திரையில் பிரபலமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். தற்போது லிப்ட் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகிறது. அடுதப்படியாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். 'ஆகாஷ் வாணி' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை அட்லீயிடம் உதவியாளராக இருந்த ஈநாக் ஏபிள் இயக்குகிறார். நாயகியாக பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர்களுடன் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

“இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சனைகளை பற்றி உணர்வுப்பூர்வமாக கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும் படியான படைப்பாக இருக்கும். எளிமையான மற்றும் யதார்த்தமான உரையாடல்கள் ஆன்மாவை ஈர்க்கும் இசை, கண்களை கவரும் ஒளிப்பதிவு, கச்சிதமாக பொருந்தும் இளம் நடிகர்கள் குழு, ஆகிய அனைத்தும் “ஆகாஷ் வாணி” தொடரை மிக அற்புதமான படைப்பாக மாற்றும்'' என்கிறார் ஈநாக் ஏபிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !