உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் சினிமாவை விட்டு விலகிய வலம்புரிஜான்

பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் சினிமாவை விட்டு விலகிய வலம்புரிஜான்

முன்னணி தமிழ் எழுத்தாளராக இருந்தவர் வலம்புரி ஜான். எம்ஜிஆருக்கு நெருக்கமான நண்பராகவும் இருந்தார். எம்ஜிஆரால் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். எம்ஜிஆர் நடத்தி வந்த தாய் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

எல்லா எழுத்தாளர்களுக்கும் சினிமா ஆசை வருவது போன்று அவருக்கும் வந்தது. 1988ம் ஆண்டு 'அது அந்த காலம்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சரத்பாபு, லட்சுமி, சரண்ராஜ் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததுடன், கடும் விமர்சனத்தையும் எதிர் கொண்டது. அதன்பிறகு வலம்புரி ஜான் சினிமாவை விட்டே விலகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !