உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் விருதில் புதிய சாதனை: 16 விருதுகளுக்கு போட்டியிடும் 'சின்னர்ஸ்'

ஆஸ்கர் விருதில் புதிய சாதனை: 16 விருதுகளுக்கு போட்டியிடும் 'சின்னர்ஸ்'

98வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 15-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. தற்போது பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிறந்த படம், இயக்குனர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, அசல் திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம், ஒலி, வி.எப்.எக்ஸ்., பின்னணி இசை, பாடல் என 16 விருதுகளுக்கு 'சின்னர்ஸ்' என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 10 விருதுகளையாவது இந்த படம் வெல்லும் என்கிறார்கள்.

இதற்கு முன்பு டைட்டானிக், அபவுட் ஈவ், லாலா லேண்ட் ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் போட்டியிட்டதே சாதனையாக இருந்தது. இந்த சாதனைகளை 'சின்னர்ஸ்' முறியடித்துள்ளது. இதே பட்டியலில் 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' படம் 13 பரிந்துரைகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 'மார்ட்டி சுப்ரீம்', 'சென்டிமென்டல் வேல்யூ' மற்றும் 'ப்ராங்கன்ஸ்டைன்' ஆகிய படங்கள் தலா 9 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

1930களில் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நிலவிய இனவெறி பின்னணியை மையமாக வைத்து சின்னர்ஸ் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !