உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம்

'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம்

சமீபத்தில் வெளியான 'சிறை' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தவர் எல்.கே.அஷய் குமார். இவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமாரின் மகன். சிறையில் அவர் நடித்த இஸ்லாமிய இளைஞன் கேரடருக்கு பாராட்டுகள் குவிந்தன. தற்போது தனது மகனை தனி ஹீரோவாகி விட்டார் தயாரிப்பாளர் லலித்குமார்.

இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. லலித்குமார் தயாரிக்கும் 13வது படம் இது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்குகிறார். ஜாபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !