பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ்
கடந்தாண்டு டொவினோ தாமஸ் நடித்த ஐடன்டிட்டி, எம்புரான், மரணமாஸ், நரிவேட்ட, லோகா சாப்டர் 1 படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பள்ளிச்சட்டம்பி'. மலையாளத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது.
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். இவர்களுடன் விஜயராகவன், சுதீர் கரமனா, பிரசாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிருத்விராஜ் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.எஸ். சுரேஷ் பாபு எழுதிய இந்தப் படத்திற்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார்,
படம் பற்றி டொவினோ தாமஸ் கூறும்போது, 'இந்த படம் 1950-60 காலகட்டத்தில் நடக்கும் கதை. பொதுவாக பீரியட் படங்களில் நடிப்பது என்றாலே எனக்கு பெருமைதான். அந்த காலகட்டத்தை உணர்த்தும் இந்த வகை படங்களில் நடிப்பு சரியாக அமையும் பட்சத்தில், ரசிகர்கள் நெஞ்சில் இன்னும் நாம் அழுத்தமாக பதிவோம்' என்றார்.