உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா

சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்தி பறவை' படத்தின் மூலம் தமிழில் அறிமுமானவர் மலையாள நடிகை ஆத்மிகா. இந்த படம் தோல்வி அடைந்ததால் தமிழில் பெரிய வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. என்றாலும் தொடர்ந்து, போங்கடி நீங்களும் உங்க காதலும், காவியன், வெள்ளை யானை போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக 2022ம் ஆண்டு 'யூகி' என்ற படத்தில் நடித்தார்.

தற்போது 4 வருடங்களுகு பிறகு 'காதல் கதை சொல்லவா' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி இருகிறார். இதில் அவர் ஜெயராமின் மனைவியாக நடித்துள்ளார். படத்தில் நகுல், ரித்திகா சென் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இசையமைத்துள்ளனர். சனில் களத்தில் இயக்கி உள்ளார். பேப்பர் மின்ட் சார்பில் ஆகாஷா அமையா தயாரித்துள்ளார். பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது “மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது. விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் வருகிறார். மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !