உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுரி கிஷனின் “உலகம்மை"

கவுரி கிஷனின் “உலகம்மை"

‛96' பட புகழ் நடிகை கவுரி கிஷன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் “உலகம்மை. நாயகனாக வெற்றி மித்ரன் நடிக்க உடன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காதல் எப்எம், குச்சி ஐஸ் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இயக்குகிறார்.

1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை “உலகம்மை. பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !