உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ

மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ

குகன் சக்கரவர்த்தியார் என்பவர் இயக்கத்தில் இந்த வாரத்தில் வெளியாகி இருக்கும் படம் வங்காள விரிகுடா. இதில் அவர் நடித்ததோடு இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட 21 துறைகளை அவரே கையாண்டுள்ளார். படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் அவர் குறியுள்ள சில கருத்துக்கள் சர்ச்சை ஆகி உள்ளன. படத்தின் முடிவில் மெரினா கடற்கரையில் திராவிட தலைவர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, சமாதிகள் உள்ளன. திராவிட கட்சிகள் பல ஆண்டுகளாக மாநிலத்தை ஆளுகின்றன எனவே மெரினா பீச் என்ற பெயரை திராவிட கடற்கரை என மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையாகவும் வைத்துள்ளார். மெரினா பீச் என்பது சென்னையின் அடையாளம். மெரினா என்பது கூட கடற்கரையை தான் குறிக்கும். வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே இந்த பெயர் இருந்துள்ளது. திடீரென இவர் திராவிட கடற்கரை என்ன பெயர் மாற்றம் செய்வது சரியா நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வங்களா விரிகுடா படத்திலும் அரசியல் இருக்கிறது. அவர் ஒரு மந்திரியை கொலை செய்ய ஆள் அனுப்பவதாகவும் சீன் உள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை புகழும் வசனங்கள், அவரின் இறுதி ஊர்வலம் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஹீரோ யார் , இவர் அரசியல் பின்புலம் உள்ளவரா என கோலிவுட்டில் கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !