மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வெளியான திரவுபதி 2, மாய பிம்பம், ஜாக்கி, வங்காள விரிகுடா ஆகிய படங்களை விட மங்காத்தாவே வசூல் ரீதியில் முன்னணியில் இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு புக்கிங் நன்றாக உள்ளது என தியேட்டர் அதிபர்கள் கூறுகின்றனர். இதனால் மங்காத்தா ரீ ரிலிசில் ஓரளவு லாபம் சம்பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மங்காத்தா ஒடும் தியேட்டர்களில் பல காட்சிகள் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒளிபரப்பப்படுகின்றன. இதனாலும் அஜித் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட மங்காத்தா பட குழுவினர் முதல் நாளில் படம் பார்த்து தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால் இதுவரை ஹீரோ அஜித், ஹீரோயின் திரிஷா, அர்ஜுன் ஆகியோர் எதுவும் பேசவில்லை.
அஜித் மனைவி ஷாலினி நேற்று மங்காத்தா படத்தை பார்த்ததாக சில வீடியோக்கள் வெளியாகின. உண்மையில் அவர் மங்காத்தாவுக்கு செல்லவில்லை தனது சகோதரர் ரிச்சர்ட் நடித்த திரவுபதி 2 படத்தை பார்த்து ரசித்துள்ளார். கார் ரேஸ் குறித்து அடிக்கடி பேசும் வீடியோ வெளியிடும் அஜித், மங்காத்தா குறித்து பேசுவாரா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.