கூகுள் குட்டப்பா பட அப்டேட்
ADDED : 1562 days ago
தமிழில் ரஜினி நடித்த லிங்கா படத்தை கடைசியாக இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் அதன்பிறகு நான் ஈ சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி மற்றும் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய்சிம்ஹா, ரூலர் போன்ற தெலுங்கு படங்களை இயக்கினார். அதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கூகுள் குட்டப்பா என்றொரு படத்தை தயாரித்து வருகிறார் கே.எஸ். ரவிக்குமார். இந்த படத்தை சபரி - சரவணன் என்ற இரட்டையர் இயக்குகிறார்கள். இப்படம் 2019ல் மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 என்ற படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகஸ்டு 3-ந்தேதியான நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.