மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1519 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1519 days ago
சின்னத்திரை நடிகையான சமீரா ஷெரீப் தனக்கு வருகின்ற நெகட்டிவான கமெண்டுகளுக்கான இண்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மற்றும் ஜி தமிழின் றெக்கைகட்டி பறக்குது மனசு தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீப். இவர் பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இதனை தொடர்ந்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதற்கு நெகட்டிவான கமெண்டுகளை கொடுத்து வந்த நெட்டிசன்களை, சமீரா பல முறை வார்னிங் செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் கர்ப்பமான வயிறுடன் புகைப்படம் போடுவதை சிலர் குறை கூறியுள்ளார். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சமீரா, இது என்னோட பேபி... என்னோட பம்ப் ... இஷ்டம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கண்களை மூடிக் கொள்ளுங்கள். என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1519 days ago
1519 days ago