உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமார் படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து

சசிகுமார் படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து

கடந்த இரண்டு வருடங்களாக யூ டியூப் மூலம் பிரபலமான பலரும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகின்றன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்களா என்பது வேறு விஷயம். அந்தவகையில் டிக்டாக் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான ஜி.பி முத்து என்பவருக்கும் தற்போது சினிமா கதவு திறந்துள்ளது. தற்போது சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா நடிக்கும் படத்தில் இவர் நடிக்கிறார். அடுத்தப்படியாக யுவன் என்பவர் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தில் டாக்டராக நடிக்கிறார் ஜி.பி முத்து.

தனது வெள்ளந்தியான நெல்லை மாவட்டத்து பேச்சின் மூலம் ரசிகர்களை இவர் கவர்ந்து உள்ளார். அதேசமயம் டிக் டாக் வீடியோக்களில் ஆபாசமாக பேசுபவர்கள் என்கிற பட்டியலில் பல பெண்கள் இருந்தாலும் அதில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் ஜி.பி முத்து மட்டும் தான். இதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறை வரை புகார் சென்றுள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள சினிமா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஜி பி முத்து தனது பாதையை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !