ஒரு பாடலுக்கு நடனமாட மோனல் கஜ்ஜாருக்கு அழைப்பு
ADDED : 1568 days ago
தமிழில் சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். சமீப காலமாக பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர், கடந்த வருடம் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-4ல் போட்டியாளராக பங்கேற்றார்.. வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14வது வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து குஜராத்தி படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது.. ஆனாலும் தெலுங்கில் வாய்ப்பு தேடி வராத நிலையில் தற்போது நாகார்ஜுனா நடிக்க உள்ள பங்காராஜூ என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டுள்ளாராம் மோனல் கஜ்ஜார். கதைப்படி சொர்க்கத்தில் நடைபெறும் காட்சிகளில் ரம்பாவாக நடனம் ஆடப்போகிறாராம் மோனல்.