மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப்போற்று
ADDED : 1525 days ago
சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 12-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான படம் சூரரைப் போற்று. இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் படமாகவும் அமைந்தது. அதோடு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று சிறந்த படமாகவும் அங்கீகரிக்கப்பட்ட சூரரைப்போற்று படம் இப்போது மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. அங்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டாவது பெரிய தியேட்டரில் இப்படம் திரையிடப்பட உள்ளதாம். இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் இங்கு திரையிடப்பட உள்ளது.