ஆகஸ்ட் 12ல் அண்ணாத்த பர்ஸ்ட் லுக்?
ADDED : 1524 days ago
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக டப்பிங் பட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மேலும் இதுவரை அண்ணாத்த படம் தொடர்பாக பர்ஸ்ட் லுக் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் எப்போது வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வருகிற ஆகஸ்ட்12-ந்தேதி டைரக்டர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.