தனுஷ் 44 அறிவிப்பு : 3 நாயகிகள் நடிக்கின்றனர்
ADDED : 1735 days ago
இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார் நடிகர் தனுஷ். தற்போது அவர் கைவசம் ‛‛மாறன், நானே வருவேன்'', தெலுங்கில் இரு படங்கள் உள்ளன. இவற்றுடன் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். தனுஷின் 44 படமாக உருவாகும் இப்படத்திற்கான அறிவிப்பு இன்று(ஆக., 4) வெளியிடப்பட்டது. தனுஷ் ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நாளை முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதோடு படத்தின் தலைப்பும் நாளை மாலை 6மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.