உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவின் போக் மார்லே

இந்தியாவின் போக் மார்லே

தமிழ் சினிமாவில், பாடகராக, நடிகராக, இசையமைப்பாளராக இருப்பவர் அந்தோணிதாசன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடி வருகிறார். சசிகுமார் நடிக்கும், ‛எம்ஜிஆர் மகன்' படம் மூலம் இசையமைப்பாளராகியுள்ளார்.

இதனிடையே நாட்டுப்புற கலைஞர்களுக்காக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இவர் எடுத்த போட்டோ ஷூட் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இவருக்கு இந்தியாவின் ‛போக் மார்லே' (Folk Marley) என்ற பட்டம் வழங்கியுள்ளனர். அதனால் டுவிட்டரில் தனது பெயருடன் போக் மார்லே என்பதை இணைத்துள்ளார் அந்தோணி தாசன். மேலும், நாட்டுப்புற இசைக்கு என, தனியாக இசைப்பள்ளி ஒன்றையும் துவங்க திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !