மீண்டும் கவுசல்யா
ADDED : 1570 days ago
விஜய், பிரசாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கவுசல்யா. ஒருக்கட்டத்திற்கு பின் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ‛முதல் மனிதன்' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். சான்ராரோஸ், ரோஷினி நாயகியராக நடித்துள்ளனர். ‛ஆடுகளம்' நரேன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‛சாதி, மதம் இரண்டையும் மனிதர்கள் தான் உருவாக்கினோம். கடவுள் உருவாக்கவில்லை' என்பதை மையமாக கொண்ட படம் இது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது.