உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபுதேவாவின் பொய்கால் குதிரை

பிரபுதேவாவின் பொய்கால் குதிரை

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ‛பொய்கால் குதிரை' என பெயரிட்டுள்ளனர். படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது. இப்படத்தில் பிரபுதேவா ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் நாயகியராக நடிக்கின்றனர். பல்லுா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து என ஆபாச படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இப்போது அதிலிருந்து விலகி இந்த படத்தை ஆக்ஷன் படமாக எடுக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !