முன்னாள் பிரதமர் இந்திராவாக பிரமிக்க வைக்கும் லாரா தத்தா
ADDED : 1567 days ago
அர்ஜுன் நடித்த அரசாட்சி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற லாரா தத்தா.. தற்போது அக்சய் குமார், ஹூமா குரோஷி, வாணி கபூர் ஆகியோருடன் இணைந்து ஹிந்தியில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தில் நடித்துள்ளார் லாரா தத்தா. இந்த படத்தை ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லாரா தத்தா.
அப்படி இந்திரா காந்தியின் தோற்றத்தில் இவர் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளன. பொதுவாக நடிகர்கள் தான் இவ்வளவு தூரம் உருவ மாற்றலுக்கு மெனக்கெடுவதை பார்த்துள்ளோம். அந்தவகையில் லாரா தத்தாவின் உருவ மாற்றத்தை பார்க்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.