மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1518 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1518 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1518 days ago
கபாலி, காலா படங்களுக்கு பிறகு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகத்தை வெப் சீரிசாக இயக்க உள்ளார், பா.ரஞ்சித். இதனை படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனமே நேரடியாக தயாரிக்கிறது.
இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது: சார்பட்டா பரம்பரை பற்றி ஒரு வெப் சீரீஸ் இயக்கும் திட்டம் உள்ளது. தமிழ்ப் பிரபா, பாக்கியம் சங்கர் உள்ளிட்ட சில எழுத்தாளர்களுடன் இணைந்து இதன் திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். சார்பட்டா பரம்பரையின் முன் கதையாக இருக்கும். அதாவது 1925ல் இருந்து தொடங்கும் கதையாக இருக்கும். இப்போதுதான் பணியை தொடங்கி இருக்கிறோம். அது இரண்டாம் பாகமா? வெப் சீரீசா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியவில்லை. என்கிறார் பா.ரஞ்சித்.
1518 days ago
1518 days ago
1518 days ago