மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1518 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1518 days ago
தமிழில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் அனிருத், ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோருடன் இணைந்து எதிர்நீச்சலடி... என்ற பாடலை பாடியவர் பிரபல பாலிவுட் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் யோயோ ஹனி சிங். ஹிர்தேஷ் சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாபி மற்றும் பாலிவுட் படங்களில் பாடி இருக்கிறார்.
பஞ்சாபிலும், பாலிவுட்டிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஹனி சிங்கின் மனைவி ஷாலினி தல்வார் கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஹனி சிங் மதுவுக்கு அடிமையாக விட்டதாகவும், தன்னை தேடி வரும் ரசிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். அதோடு தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தன்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபி முன்னணி நடிகை ஒருவர் உள்பட அவருக்குப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதைத் தான் பலமுறை தட்டிக் கேட்டும் அவர் கேட்கவில்லை என்றும் ஷாலினி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வரும் 28ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு யோயோ ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1518 days ago
1518 days ago