தேதி கிடைக்காமல் தவிக்கும் ஆச்சார்யா
ஒரு காலத்தில் சிரஞ்சீவி படம் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் எல்லாம் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி சிரஞ்சீவி தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தை ரிலீஸ் செய்வதற்கு உரிய தேதி கிடைக்காமல் தவித்து வருகிறார்.
கொராட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மைதான். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நீடித்து வருகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை.
தற்போது இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா, சர்க்கார் வாரி பாட்டா உள்ளிட்ட படங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ் பொங்கல் என முக்கியமான பண்டிகை தேதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. குறிப்பாக, சங்கராந்தி பண்டிகையில் தனது படத்தை வெளியிடலாம் என நினைத்திருந்தார் சிரஞ்சீவி ஆனால் அந்த தேதியில் மட்டும் தற்போதைய நிலைமையில் 4 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கின்றன