உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாய்ப்பு தேடும் வசுந்தரா

வாய்ப்பு தேடும் வசுந்தரா

அதிசயா என்ற பெயரில் வட்டாரம் படத்தில் அறிமுகமானவர் வசுந்தரா. அதன் பிறகு ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்பட பல படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள புத்தன் இயேசு காந்தி, வாழ்க விவசாயி படங்கள் வெளிவரவில்லை.

இடையில் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார் வசுந்தரா. 6 வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த படம் தான் பக்ரீத். இந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமாகி உள்ளார். தனது உடலை பிட்டாக்கி தனியாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !