உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் திருமணம் : பள்ளி பருவ தோழியை மணக்கிறார்

மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் திருமணம் : பள்ளி பருவ தோழியை மணக்கிறார்

வளர்ந்து வரும் இளம் மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ். அங்கமாலி டைரீஸ் படத்தில் அறிமுகமான இவர் ஜல்லிக்கட்டு, அஜகஜந்திரம், அன்னபரம்பில் வோர்ல்ட் கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆண்டனி வர்க்கீஸ், அனிதா பாலோஸ் என்பரை திருமணம் செய்கிறார். இருவரும் பள்ளி பருவம் தொட்டே காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அனிதா நர்சிங் படித்திருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கிறிஸ்தவ முறைப்படி எளிமையான முறையில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !