சார்பட்டா பரம்பரை படக்குழுவை பாராட்டிய கமல்
ADDED : 1606 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்து வருகிறார் கமல். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, துஷாரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சினிமா கலைஞர்கள் மட்டுமின்றி பெருவாரியான ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் அப்படத்தை பார்த்த கமல்ஹாசனும் படக்குழுவை நேரில் அழைத்து தனது வியப்பினை வெளிப்படுத்தியவர், ஒவ்வொரு கேரக்டர்களில் நடித்தவர்களையும் பாராட்டியிருக்கிறார். அப்படி பா.ரஞ்சித் உள்ளிட்ட சார்பட்டா பரம்பரை படக்குழுவினர் கமலை சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.