மேலும் செய்திகள்
மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை
1492 days ago
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
1492 days ago
நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம் நடிகர் குரு லக் ஷ்மண்
1492 days ago
மலையாள சினிமாவின் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் சோஷியல் மீடியாவில் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதன்முதலில் மம்முட்டி மலையாளத்தில் மிகச்சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த 'அனுபவங்கள்' பாலிச்சக்கல்' என்கிற படம் 1971ஆம் வருடம் இதே ஆக-6ஆம் தேதி தான் வெளியானது. அதன்பின் 1973ல் காலச்சக்கரம் என்கிற படத்தில் நடித்ததுடன் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, கல்லூரி படிப்பை தொடர்ந்தார். படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்தவர், திருமணமும் செய்த பின்னரே மீண்டும், 1980ல் நடிப்பில் முழு நேரமாக கால் பதித்தார்.
இதுவரை 6 மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்முட்டி, சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருதுகளும், 7 முறை மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ, இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்கள் என ஏராளமான விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தக்காரரும் கூட. ஒரு வடக்கன் வீரகதா, பழசி ராஜா ஆகிய வரலாற்று படங்கள் மம்முட்டியின் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கற்கள்.. கிட்டத்தட்ட சினிமாவில் ஐந்து தலைமுறைகளை கடந்துவிட்ட மம்முட்டி, மாறிவரும் சினிமா சூழல் மற்றும் டெக்னாலஜிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதால் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
மம்முட்டி பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டாலும், சினிமாவில் தனது 50வது வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் கூட, இன்னும் ஹீரோவாகவே நடித்து வருவதும் கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான்.
மோகன்லால் வாழ்த்து
மலையாளத்தில் மற்றுமொரு முன்னணி நடிகரான மோகன்லால், மம்முட்டியின் 50 ஆண்டு திரை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 55 படங்களில் நடித்துள்ளனர். அதையும் குறிப்பிட்டு தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார் மோகன்லால்.
1492 days ago
1492 days ago
1492 days ago