பாவாடை தாவணியில் மஞ்சக்காட்டு மைனாவாக அசத்தும் விஜே அர்ச்சனா
ADDED : 1576 days ago
கல்லூரி படிக்கும் காலங்களில் டப்ஸ்மாஷ் வீடியோக்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா. தொலைக்காட்சி தொகுப்பாளராக ஆகும் கனவோடு சின்னத்திரையில் நுழைந்த அவர், ஆதித்யா தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விஜே அர்ச்சனா என்ற பெயரை பெற்றார். தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் வில்லத்தனமான நடிப்பில் கலக்கி வருகிறார். முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். இண்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார். பாவாடை தாவணியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.