போதை ஏத்தும் கண்ணால் ரசிகர்களை மிரள விட்ட லாஸ்லியா
ADDED : 1530 days ago
பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகள் மனதில் எளிதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. இலங்கையில் டிவி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடமும் பிரபலமானார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
லாஸ்லியா, பிக்பாஸ் ஆரி நடிக்கும் படத்திலும், ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் 'ப்ரண்ட்ஷிப்' படத்திலும், தர்ஷனுடன் 'கூகுள் குட்டப்பா' படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். நடிகையாக மாறிவிட்ட லாஸ்லியா, மாடர்ன் உடைகளில் போட்டோஷூட்களை செய்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். தற்போது பீச் போட்டோஷூட் ஒன்றில் போதை ஏற்றும் கண்களுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்கள வெகுவாக கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் அந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளித்தெறித்து வருகின்றனர்.