கவர்ச்சியாக நடனம் ஆடிய லிஷா எக்லைர்ஸ்... வைரலாகும் வீடியோ!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லிஷா எக்லைர்ஸ். 'கண்மணி' தொடரில் நடித்து தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றார். 2 வருடம் ஒளிபரப்பான அந்த தொடர் நிறைவு பெற்றவுடன் அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. லிஷா எக்லைர்ஸ் 'பலே வெள்ளைய தேவா', 'திருப்புமுனை', 'பொதுநலன் கருதி', 'சிரிக்க விடலாமா', 'மைடயர் லிசா', 'பிரியமுடன் பிரியா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சீரியல் மற்றும் சினிமாவில் பிரபலமடைவதற்கு முன் மாடலிங் துறையில் இருந்த அவர் இப்போதும் போட்டோஷூட்களில் கலக்கி வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் லிசா இன்ஸ்டாகிராம் ரீலில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் புடவை கட்டிக்கொண்டு இடுப்பு தெரிய கவர்ச்சியாக ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கமெண்டுகளில் காதல் செய்து வருகின்றனர்.