அனு இம்மானுவேலின் கவர்ச்சி அவதாரம்
ADDED : 1517 days ago
மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவர் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான ரோலில் நடித்து இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.