மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1489 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1489 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1489 days ago
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சீசன் 5க்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனை மிகவும் கலகலப்பாகக் கொண்டு செல்ல நிகழ்ச்சிக் குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. சொல்லப் போனால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட 'கோமாளி' நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம். 'கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சினிமாவில் வாய்ப்பிழந்தவர்கள்தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து வெளியில் பிரபலமில்லாத சிலரை, (அவர்களை எப்படி தேர்வு செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்) பிரபலப்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களும் 'பிக் பாஸ்' ஒளிபரப்பாகும் வரையில்தான் பிரபல வெளிச்சத்தில் இருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
'பிக் பாஸ்' சீசனில் பிரபலமான தர்ஷனுக்கு தனது நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்ததாக கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால், இதுவரை வாய்ப்பளிக்கவில்லை. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்தான் அவரது தயாரிப்பில் 'கூகுள் குட்டப்பா' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இப்போது சீசன் 5க்கான வேலைகள் பரபரப்பாக ஆரம்பமாகியுள்ளதாம். 'கோமாளி' நிகழ்ச்சியில் நகைச்சுவை அதிகம் இருந்ததால்தான் அது பெரிய ஹிட்டானது. எனவே இந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களில் சில நகைச்சுவை பிரபலங்களை எப்படியாவது சேர்க்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்களாம். வழக்கம் போல தெரியாத சில முகங்களும் நிகழ்ச்சியில் இடம் பெறுவது உறுதியாம்.
விரைவில் இந்த வருட ஐந்தாவது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
1489 days ago
1489 days ago
1489 days ago