குணசித்ர, வில்லன் நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார்
ADDED : 1563 days ago
பாண்டிட் குயின் படத்தில் சம்பல் கொள்கைக்காரனாகவும், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் மும்பை சேரிப் பகுதி தாதாவாகவும், மான் கீ ஆவாஸ் பிரக்யா தொடரிலும் நடித்து புகழ்பெற்றவர் அனுபம் ஷ்யாம். இவைகள் தவிர லஜ்ஜா, நாயக், சத்யா, தில் சே உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர். 63 வயதான அனுபம் ஷியாம், உடல்நலக் குறைவு காரணமாக மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.