உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரகாஷ்ராஜிற்கு எலும்பு முறிவு

பிரகாஷ்ராஜிற்கு எலும்பு முறிவு

அண்ணாத்த, எனிமி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். இந்நிலையில் சென்னையில் நடை பெற்ற ஒரு படப்பிடிப்பில் தவறி விழுந்ததில் பிரகாஷ்ராஜ்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சோசியல் மீடியாவில் அவர் கூறுகையில், ஒரு சிறிய வீழ்ச்சி, ஒரு சிறிய எலும்பு முறிவு. ஒரு அறுவை சிகிச்சைக்காக எனது நண்பர் மருத்துவமனையில் இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. என்னை உங்கள் எண்ணங்களில் வைத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !