உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30 வருட இயக்குனர் கனவு நிறைவேறியது: அரவிந்த்சாமி மகிழ்ச்சி

30 வருட இயக்குனர் கனவு நிறைவேறியது: அரவிந்த்சாமி மகிழ்ச்சி

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் நவரசா அந்தாலஜி படத்தில் ரவுத்திரம் என்ற குறும்படத்தை அரவிந்த்சாமி இயக்கி உள்ளார். தான் இயக்குனராக மாறியது எப்படி என்பது குறித்து அவர் தற்போது கூறியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:

90களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் நவரசா குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. எனது 30 வருட இயக்குனர் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி.

ஒரு படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம். அவர்கள் தான் என் வழிகாட்டி.
ஏதாவது செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அது குறித்து, கவனித்து கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும், மற்றும் அதற்கான வாய்பு வரும் போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அந்தாலஜியில் கோபத்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன் அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !