ஓவியாவின் சூப்பர் மாடல் அவதாரம்
ADDED : 1515 days ago
‛களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார்.
ஓவியா, சில நாட்களுக்கு முன்னர் பகிர்ந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஓவியாவா இது என்று கூறும் அளவுக்கு உடல் மெலிந்து, ஒல்லியான தோற்றத்தில் காணப்பட்டார். இந்நிலையில் சூப்பர் மாடலாக மாறிய அழகிய புகைப்படங்களை நடிகை ஓவியா, தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.