நினைத்தாலே இனிக்கும் புதிய தொடர்
ADDED : 1516 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. யாரடி நீ மோகினி தொடரை தயாரித்த மன்ங் ஸ்டுடியோஸ் இந்த தொடரையும் தயாரிக்கிறது.
ஆயுத எழுத்து தொடரில் நடித்து பிரபலமான ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக சுவாதி சர்மா நடிக்கிறார். இவர்களுடன் அரவிந்த் கத், மிதுன் ராஜ், ரஞ்சனா சுதர்சன், காயத்ரி பிரியா, நீமா ஸ்ரீகாந்த், ஜனனி பிரபு மற்றும் நேகா ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
சைக்கிளில் இனிப்பு பலகாரம் விற்று படிப்படியாக அஞ்சலி ஸ்வீட்ஸ் என்ற பெரிய நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் இளம் பெண்ணுக்கும் இனிப்பே பிடிக்காத ஹீரோவுக்கும் இடையிலான உரசல், விரிசல் தான் கதையின் மைய கரு. பாண்டியன் ஸ்டோரில் பலசரக்கு கடை மாதிரி இதில் இனிப்பு கடை. ஒளிபரப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.