பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகி பாபு
ADDED : 1618 days ago
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. என்னதான் அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தாலும் கூட இன்னும் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு நண்பனாக நடிக்கும் பட்டியலில் தற்போது யோகி பாபு தான் முன்னணியில் இருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய்யுடன் ஐந்தாவது முறையாக இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார் யோகிபாபு. இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது, இதனை அடுத்து அங்கிருந்து கிளம்பி நேற்று முதல் சென்னையில் நடைபெறும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் யோகிபாபு, இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.