மம்முட்டியின் 50வது வருடம் : விழா எடுக்க கேரள அரசு முடிவு
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி திரையுலகில் நுழைந்து சமீபத்தில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து இருக்கிறார். இதை தொடர்ந்து அனைத்து மொழிகளில் இருந்தும் பல திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் இப்போது வரை தங்களது வாழ்த்தை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 3 தேசிய விருதுகள், 7 கேரள அரசு விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள மம்முட்டி, மலையாள சினிமாவுக்கு மட்டுமல்லாது கேரளாவின் முக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார்.
இந்தநிலையில் மம்முட்டியின் 50வது வருட விழாவை கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள செய்தி ஒளிபரப்பு துறை மற்றும் திரைப்பட வளர்ச்சி துறையைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜி செரியன் சட்டசபையில் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மம்முட்டியின் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகி சோசியல் மீடியாவில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்