தோனி, விஜய் திடீர் சந்திப்பு... டுவிட்டர் டிரெண்டிங்கில் தலதளபதி
ADDED : 1501 days ago
தமிழ் சினிமாவில் தனது ரசிகர்களால் தளபதி என அன்பாக அழைக்கப்படுபவர் விஜய். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் தல என அன்பாக அழைக்கப்படுபவர் கிரிக்கெட் வீரர் தோனி.
சென்னையில் இன்று இருவரும் சந்தித்துக் கொண்டது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகியுள்ளது. #ThalaThalapathy என இருவரது ரசிகர்களும் டுவிட்டரில் டிரெண்டிங்கை ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் ஒரு விளம்பரப் படப்பிடிப்புக்காக தோனி வந்துள்ளார். அப்போது எதிர்பாராமல் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.
விஜய்யின் கேரவனுக்குச் சென்ற தோனி அவருடன் சிறிது நேரம் பேசியிருக்கிறார். அப்புகைப்படங்களை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் டுவிட்டரில் பதிவிட இன்று முழுவதும் தல தளபதி என டுவிட்டரில் நிமிடத்திற்கொரு முறை பதிவுகள் விழுந்து கொண்டே இருக்கும்.
யுஏஇ-யில் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தற்போது சென்னைக்கு வந்து தங்கியுள்ளனர். இங்கிருந்துதான் துபாய் பயணிக்க உள்ளனர்.