உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் ரிலீஸ், தள்ளிப் போக வாய்ப்பு

ஆர்ஆர்ஆர் ரிலீஸ், தள்ளிப் போக வாய்ப்பு

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திர போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 13ம் தேதியன்று வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதில் மாற்றம் வரும் என்ற தகவல் பரவியுள்ளது.

படத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் தியேட்டர்களைத் திறக்கவில்லை. வெளி நாடுகளில் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கும் மக்கள் அதிகம் வரவில்லை. எனவே, படத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருட டிசம்பர் மாதத்திற்கு ஏற்கெனவே சில தெலுங்குப் படங்களை வெளியிட உள்ளார்கள். அதனால், அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிடலாம் என்றும் தெரிகிறது.

இது குறித்த முறையான அறிவிப்பை படக்குழு உக்ரைன் நாட்டு படப்பிடிப்பிலிருந்து இந்தியா திரும்பி வந்ததும் அறிவிக்கலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !