பிரகாஷ்ராஜிற்கு அறுவை சிகிச்சை நிறைவு
ADDED : 1514 days ago
கடந்த 10-ந்தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலத்தில் நடிப்பதற்காக சென்னை வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அப்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு ஐதராபாத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த பிரகாஷ்ராஜ், ஒரு சிறிய எலும்பு முறிவு என்பதை வெளிப்படுத்தினார். இந்தநிலையில் தற்போது தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். அதோடு, வெற்றிகரமான அறுவை சிகிச்சை. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.